MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Interesting Facts: அமெரிக்காவில் குழந்தையை அடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சிறை தண்டனை கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

Interesting Facts: அமெரிக்காவில் குழந்தையை அடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சிறை தண்டனை கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?

Child Protection Laws in America: நம்ம ஊர்ல குழந்தைங்க சேட்டை செஞ்சா நாலு அடி போடுவோம். ஆனா அமெரிக்கா போன்ற வெளிநாடுகள்ல குழந்தைகளை அடிச்சா, ஸ்கூல்லயோ வீட்லயோ, விளைவுகள் ரொம்ப கடுமையா இருக்கும். பெற்றோருக்கும் தப்ப முடியாது.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 20 2026, 01:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Child Protection Laws in America
Image Credit : Muhammad Riyas/Facebook

Child Protection Laws in America

குழந்தைகள் சேட்டை செய்வது இயல்பு. அது அவர்களின் உரிமை கூட. ஆனால் அதற்காக அவர்களை அடித்து துன்புறுத்துவது தவறு. அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகளை அடித்தால் என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் தெரியுமா? அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

இதையும் படியுங்கள் -  RO Water Purifier: ஃபில்டர் தண்ணி குடிச்சா கிட்னி பாதிக்குமா? டாக்டர்ஸ் சொல்றது என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
குழந்தைகளை அடித்தால், கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்
Image Credit : Gemini AI

குழந்தைகளை அடித்தால், கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்

அமெரிக்காவில் (USA) குழந்தைகளின் உரிமைகளுக்கும், பாதுகாப்புக்கும் முதல் இடம். வீட்டில் பெற்றோரோ, பள்ளியில் ஆசிரியரோ குழந்தைகளை அடித்தால், கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதையும் படியுங்கள் -  Facts: அமெரிக்காவில் ரோட்டில் குப்பை போட்டால் என்ன ஆகும் தெரியுமா? அபராதம் எவ்வளவுன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

38
கண்டிப்பிற்கும் (Discipline) வதைக்கும் (Abuse) என்ன வித்தியாசம்?
Image Credit : Instagram

கண்டிப்பிற்கும் (Discipline) வதைக்கும் (Abuse) என்ன வித்தியாசம்?

அமெரிக்காவின் பல மாநிலங்களில் பெற்றோர் லேசான உடலளவிலான கண்டிப்பு அளிக்க அனுமதி இருந்தாலும், அதற்கு மிகக் கடுமையான எல்லைகள் உண்டு:

சட்டவிரோதமான தண்டனை: பிரம்பு, பெல்ட், கரண்டி, துடைப்பம் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அடிப்பது, அல்லது கையால் அடித்தாலும் உடலில் சிவந்த தழும்பு, வீக்கம், காயம், சிராய்ப்பு போன்றவை ஏற்படுவது அனைத்து 50 மாநிலங்களிலும் சட்டப்படி குற்றமாகும்.

உளவியல் துன்புறுத்தல்: குழந்தையை அறையில் பூட்டி வைப்பது, பசியோடு போடுவது, அல்லது பயமுறுத்துவதும் குற்றத்தின் கீழ் வரும்.

இதையும் படியுங்கள் -  Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?

48
பள்ளியில் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் (Corporal Punishment)
Image Credit : Gemini AI

பள்ளியில் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் (Corporal Punishment)

அமெரிக்காவின் 35க்கும் மேற்பட்ட மாகாணங்களில், பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது (Corporal Punishment) சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ஆசிரியர் மாணவரை அடித்தால், உடனடியாக வேலை நீக்கம் செய்யப்படுவார். அவரது டீச்சிங் லைசென்ஸும் ரத்து செய்யப்படும். மேலும், கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு சிறை செல்லவும், அபராதம் கட்டவும் நேரிடலாம்.

இதையும் படியுங்கள் -  லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

58
உடல் ரீதியான துன்புறுத்தலாக மாறக்கூடாது (Child Abuse & CPS)
Image Credit : Gemini AI

உடல் ரீதியான துன்புறுத்தலாக மாறக்கூடாது (Child Abuse & CPS)

பெற்றோர்கள் குழந்தைகளை கண்டிக்கலாம், ஆனால் அது உடல் ரீதியான துன்புறுத்தலாக (Child Abuse) மாறக்கூடாது. குழந்தையின் உடலில் தழும்பு, காயம் அல்லது ரத்தம் வரும்படி அடித்தால், அது சட்டப்படி குற்றம். பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் புகார் அளித்தால், குழந்தைகள் பாதுகாப்பு சேவை (CPS) அதிகாரிகள் உடனடியாக விசாரிப்பார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால், குழந்தைகளை அரசே எடுத்துக்கொண்டு, ஃபாஸ்டர் கேர் (Foster Care) இல்லங்களில் ஒப்படைத்துவிடும்.

இதையும் படியுங்கள் -  அமெரிக்காவில் குப்பை அள்ளும் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

68
குழந்தைகளைத் துன்புறுத்துவதற்கான தண்டனைகள் என்ன?
Image Credit : Gemini AI

குழந்தைகளைத் துன்புறுத்துவதற்கான தண்டனைகள் என்ன?

தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து, பெற்றோருக்கான தண்டனை மாறும். சிறிய வழக்குகளில் கவுன்சிலிங் அல்லது பேரன்டிங் வகுப்புகளுக்கு செல்ல நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், கடுமையான காயங்கள் ஏற்பட்டால், வீட்டு வன்முறை சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதியப்படும். இதனால், சில மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள் -  இன்னும் 7 நாட்களில் 5 ராசிகளுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்.! வேலை, பணம், ஆரோக்கியம் எல்லாம் டேஞ்சர்.!

78
அவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தால் என்ன செய்வார்கள்?
Image Credit : Gemini AI

அவர்கள் வெளிநாட்டவர்களாக இருந்தால் என்ன செய்வார்கள்?

கிரீன் கார்டு அல்லது விசாவில் இருக்கும் வெளிநாட்டினர் இந்த குற்றத்தைச் செய்தால், அவர்களை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தவும் (Deport) வாய்ப்புள்ளது. 

கலாச்சார வேறுபாடு சட்டம் ஏற்காது: எங்கள் நாட்டில் குழந்தையை இப்படித்தான் கண்டிப்போம்" என்ற விளக்கம் அமெரிக்க நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படாது.

விசா மற்றும் கிரீன் கார்டு பாதிப்பு: குழந்தை வதை வழக்கில் கைது செய்யப்பட்டால், அது குற்றவியல் பதிவாக (Criminal Record) மாறும். இதனால் எச்-1பி (H-1B), கிரீன் கார்டு அல்லது குடியுரிமை விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படலாம்.

அமெரிக்காவில் குழந்தைகளை அடிப்பது ஒரு குற்றம். எனவே, அங்கு வசிப்பவர்கள் குழந்தை வளர்ப்பில் மிகவும் பொறுமையாகவும், சட்டங்களை அறிந்தும் இருப்பது அவசியம்.

இதையும் படியுங்கள் -  யானைகள் பழி வாங்குமா? 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேடி வந்த யானை.! ஒரே குடும்பத்தில் பறிபோன 4 உயிர்.!

88
அமெரிக்காவில் வாழும் பெற்றோர் செய்ய வேண்டியவை
Image Credit : stockPhoto

அமெரிக்காவில் வாழும் பெற்றோர் செய்ய வேண்டியவை

நேர்மறை வளர்ப்பு முறை (Positive Parenting): அடித்தலுக்குப் பதிலாக 'Time-out' (குறிப்பிட்ட நேரம் தனியாக அமர வைப்பது), விளையாட அனுமதி மறுப்பது (Privilege Removal) போன்ற முறைகளைப் பின்பற்றுங்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்: குழந்தை பிடிவாதம் பிடித்தால் கோபப்படாமல் அமைதியாகக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்.

விழிப்புணர்வு: நீங்கள் வாழும் மாநிலத்தின் Child Welfare Laws பற்றிய முழுமையான விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Broken Heart Syndrome: கெட்ட செய்தி கேட்டதும் மாரடைப்பு வருமா? இது சினிமா இல்லை நிஜம்!
Recommended image2
வீட்டில் கொத்துக் கொத்தாக பச்சை மிளகாய் காய்க்க வேண்டுமா? இந்த எளிய டெக்னிக்கை ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Diwali Veg Recipe: தீபாவளிக்கு இந்த வாழைப்பூ புலாவ் செஞ்சு அசத்துங்க! பிரியாணி தோத்துடும்.!
Related Stories
Recommended image1
Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?
Recommended image2
Facts: அமெரிக்காவில் ரோட்டில் குப்பை போட்டால் என்ன ஆகும் தெரியுமா? அபராதம் எவ்வளவுன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved