MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • யானைகள் பழி வாங்குமா? 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேடி வந்த யானை.! ஒரே குடும்பத்தில் பறிபோன 4 உயிர்.!

யானைகள் பழி வாங்குமா? 14 ஆண்டுகளுக்குப் பிறகு தேடி வந்த யானை.! ஒரே குடும்பத்தில் பறிபோன 4 உயிர்.!

Do Elephants Take Revenge: யானைகள் பழிவாங்குமா என்கிற கேள்விக்கு அறிவியல் ரீதியாகவும் நேபாளத்தின் துர்பே யானையின் கதையை வைத்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 19 2026, 05:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Do Elephants Take Revenge
Image Credit : twitter

Do Elephants Take Revenge

மனிதர்களிடம் நெருங்கி பழகும் விலங்குகளில் யானைகளும் ஒன்று. மக்கள் யானைகள் மீது மிகுந்த அன்பை காட்டுகிறார்கள். பாம்புகள் பழிவாங்கும் குணம் கொண்டுள்ளதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு யானை 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் உயிரைப் பறித்துள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற இரண்டு பேரை துரத்தி துரத்தி அவர்களின் உயிரையும் பறித்துள்ளது. இதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  கம்ப்யூட்டர் மவுஸில் ஏன் சிவப்பு விளக்கு எரிகிறது? இது வெறும் டிசைன் இல்ல.! செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
யானைகள் பழிவாங்குமா?
Image Credit : Asianet News

யானைகள் பழிவாங்குமா?

மனிதர்கள் நினைப்பது போல யானைகளிடம் பழிவாங்கும் குணம் கிடையாது. ஆனால் அவற்றிடம் மிகவும் கூர்மையான நினைவாற்றல் மற்றும் உணர்ச்சிவசப்படும் தன்மை உண்டு. தனக்கோ அல்லது தன் கூட்டத்திற்கோ தீங்கு விளைவித்த நபர்களின் முகம் வாசனை அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறத்தை கூட யானைகளால் பல வருடங்கள் நினைவில் வைத்திருக்க முடியும். மனிதர்களால் துன்புறுத்தப்படும் பொழுது யானைகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும். இதனால் அந்த மனிதர்களை மீண்டும் பார்க்கும் பொழுது தற்காப்புக்காகவோ அல்லது பயம் காரணமாகவோ அவை ஆக்ரோஷமாக தாக்குகின்றன. இதை மனிதர்கள் பழிவாங்குதல் என்று புரிந்து கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள் -  லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

37
நேபாளத்தின் 'துர்ப்பே' (Dhrube) யானையின் கதை
Image Credit : Asianet News

நேபாளத்தின் 'துர்ப்பே' (Dhrube) யானையின் கதை

நேபாளத்தில் யானை ஒன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை துரத்தி துரத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர்களின் உயிரை பறித்துள்ளது. இதன் காரணமாக அந்த குடும்பம் வீட்டை விட்டு வெளியே வேறு இடத்திற்கு மாறியது. ஆனால் அந்த யானை அங்கும் வந்துள்ளது. சித்வான் தேசிய பூங்காவின் தகவல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அபிலாஷ் தாபா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். யானையை கண்காணிக்க ஒரு கண்காணிப்பு கருவியும் பொருத்தியுள்ளனர். தரவுகளை சோதித்த போது இந்த யானை இதுவரை சுமார் 25 பேரின் உயிரை பறித்துள்ளது. அதில் பாதுகாப்பு பணியாளர்களும் அடங்குவர்.

இதையும் படியுங்கள் -  உலகத்திலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!

47
14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வந்த துர்பே
Image Credit : Asianet News

14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வந்த துர்பே

ஜகத்பூர் பகுதியை சேர்ந்த ஷனிச்சரா செய்தியாளர்களிடம் கூறிய போது, 14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2012 அன்று துர்பே யானை தனது தந்தை பதிரார் மற்றும் தாய் ஸர்லி ஆகியோரை கொன்றதாக கூறினார். அந்த சம்பவத்திற்கு பிறகு ஷனிச்சரா தனது வீட்டை மாற்றி ஜகத்பூரில் குடியேறினார். யானை இங்கு வராது என்று நினைத்தார். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு யானை ஷனிச்சராவின் வீட்டைத் தாக்கி அவரது மருமகள் ஆஷிகா மற்றும் நான்கு வயது பேரன் ஆகியோரின் உயிரைப் பறித்துள்ளது.

இதையும் படியுங்கள் -  ஒயின் பாட்டில்கள் ஏன் 750 மிலி அளவிலும், அடர் பச்சை நிறத்திலும் இருக்கின்றன? இதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணம் தெரியுமா?

57
ஏன் பழி வாங்கியதாகக் கூறப்பட்டது?
Image Credit : Asianet News

ஏன் பழி வாங்கியதாகக் கூறப்பட்டது?

2012 ஆம் ஆண்டு யானை மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .அப்போது அது தப்பி காட்டுக்குள் சென்று விட்டது. ஆனால் அந்த யானையை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 2016 இல் அந்த யானை மீண்டும் திரும்பியது. தனது பரப்பளவையும் விரிவுபடுத்தி இருந்தது. 2023 ஆம் ஆண்டு அதன் மீது கண்காணிப்பு கருவி கொண்டு பொருத்தப்பட்டு. அதிலிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ராணுவத்தினர் மற்றும் பூங்கா ஊழியர்கள் தன்னை துன்புறுத்தியதால் சீருடை அணிந்த மனிதர்களை கண்டாலே துர்பே துரத்தி துரத்தி தாக்கி வருகிறது. மேலும் யானை மீது நடந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மனிதர்களை அது தேடி தேடி பழி வாங்குவதாக கதைகளும் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள் -  வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!

67
அறிவியல் பூர்வமான உண்மை என்ன?
Image Credit : Asianet News

அறிவியல் பூர்வமான உண்மை என்ன?

விலங்கியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி துர்பே யானையின் இந்த ஆக்ரோஷத்திற்கு முக்கிய காரணம் மனிதர்களால் ஏற்பட்ட காயங்களும் மஸ்து நிலையும் ஆகும். ஆண் யானைகளுக்கு மஸ்து ஏற்படும் பொழுது உடலில் டெஸ்டிஸ்ட்ரோன் ஹார்மோன் அளவு அதிகமாக உயர்ந்து அவை கடுமையான கோபத்திற்கும், வன்முறைக்கும் உள்ளாகும். மேலும் துர்பேவின் உடலில் மனிதர்கள் சுட்ட துப்பாக்கிச் சூடுகளும், குண்டுகள் துளைத்த காயங்களும் இருந்தன. அந்த வலி மற்றும் பயம் காரணமாகவே அது மனிதர்களை கண்டாலே, தாக்கத் தொடங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள் -  வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்? அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து.! சரியான அளவை தெரிஞ்சிக்கோங்க.!

77
யானைகள் திட்டமிட்டு, சதி செய்து பழி வாங்குவதில்லை
Image Credit : Asianet News

யானைகள் திட்டமிட்டு, சதி செய்து பழி வாங்குவதில்லை

யானைகள் திட்டமிட்டு சதி செய்து பழி வாங்குவதில்லை. அவை மனிதர்கள் தனக்கு செய்த தீங்கையும், வலியையும் மறப்பதில்லை. நேபாளத்தின் துர்பே யானையின் கதையும் மனிதர்களின் அத்துமீறலாப் ஒரு யானை எப்படி ஆக்ரோஷமாக மாறுகிறது என்பதற்கான சோகமான உதாரணமே தவிர, அது சினிமா பாணியிலான பழி வாங்கல்கள் கிடையாது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வைரல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தக்காளி முதல் மிளகாய் வரை... சிவப்பு காய்கறிகளில் ஒளிந்திருப்பது இவ்வளவு நன்மைகளா?
Recommended image2
வீட்டில் பல்லி தொல்லை அதிகமா? கெமிக்கல் இல்லாமல் விரட்ட உதவும் 5 சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Potato Storage Tips: வெங்காயம், உருளை சேர்த்து வைக்கலாமா? அழுகாமல் இருக்க இந்த ரகசியம் தெரிஞ்சுகோங்க
Related Stories
Recommended image1
Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?
Recommended image2
Facts: அமெரிக்காவில் ரோட்டில் குப்பை போட்டால் என்ன ஆகும் தெரியுமா? அபராதம் எவ்வளவுன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved