MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Fun Facts: கம்ப்யூட்டர் மவுஸில் ஏன் சிவப்பு விளக்கு எரிகிறது? இது வெறும் டிசைன் இல்ல.! செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

Fun Facts: கம்ப்யூட்டர் மவுஸில் ஏன் சிவப்பு விளக்கு எரிகிறது? இது வெறும் டிசைன் இல்ல.! செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

Why do Computer Mouse have Red Lights: கம்ப்யூட்டர் மவுஸின் (Mouse) கீழ் ஏன் எப்போதும் சிவப்பு விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் பின்னால் உள்ள காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 18 2026, 01:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Why do Computer Mouse have Red Lights
Image Credit : Getty

Why do Computer Mouse have Red Lights

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினி அல்லது மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் மவுஸின் அடிப்பகுதியில் எப்போதும் சிகப்பு நிற விளக்குகளே எரிகின்றன. எத்தனையோ வண்ணங்கள் இருந்தாலும் ஏன் சிவப்பு நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பின்னால் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் -  Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பழைய மவுஸ்களில் இருந்த தொழில்நுட்பம்
Image Credit : Getty

பழைய மவுஸ்களில் இருந்த தொழில்நுட்பம்

பழைய மவுஸ்கள் அதாவது 1990-களுக்கு முன்பு வரை மவுஸ்களின் அடிப்பகுதியில் எல்இடி விளக்குகள் எதுவும் இருக்காது. ஒரு கனமான ரப்பர் அல்லது உலோக பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படும். மவுஸை நகர்த்தும்பொழுது அந்த பந்து சுழலும். அதன் அடிப்படையில் திரையில் கர்சர் நகரும். இந்த மவுஸ்கள் அனைத்து பரப்புகளிலும் சரியாக வேலை செய்யாது. சில சமயம் பந்து சுழலாமல் சிக்கிக்கொண்டால் மவுஸ் ஒழுங்காக வேலை செய்யாது. தூசி படிந்தால் பந்து சுழல்வதில் சிக்கல் ஏற்படும். இந்த குறைபாடுகளை போக்க பந்துகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகள் மற்றும் சென்சார் ஆப்டிகல் மவுஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள் -  Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!

Related Articles

Related image1
Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?
Related image2
Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
35
ஆப்டிகல் மவுஸ்கள்
Image Credit : Getty

ஆப்டிகல் மவுஸ்கள்

ஆப்டிகல் மவுஸ்கள் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மற்ற வண்ணங்களை காட்டிலும் சிகப்பு நிறமானது தொழில்நுட்பம் பழமையானதாகவும், விலை மலிவானதாகவும் இருந்தது. மவுஸ்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் பொருட்டு இது சிறந்த தேர்வாக அமைந்தது. மவுஸின் கீழ் இருக்கும் சிறிய எல்இடி விளக்கோடு மிகச் சிறிய கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிவப்பு விளக்கு தரை பரப்பின் மீது பட்டுப் பிரதிபலிக்கும் பொழுது அங்கு இருக்கும் குட்டி கேமரா ஒரு நொடிக்கு ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுக்கிறது. அந்த புகைப்படங்களில் ஏற்படும் மாற்றங்களை மவுஸிற்குள் இருக்கும் குட்டி பிராஸசர் கணக்கிடுகிறது. அதை வைத்தே கம்ப்யூட்டர் திரையில் கர்சர் நகர்கிறது.

இதையும் படியுங்கள் -  Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!

45
சிகப்பு நிற ஒளியின் முக்கியத்துவம்
Image Credit : Getty

சிகப்பு நிற ஒளியின் முக்கியத்துவம்

அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது மற்ற வண்ணங்களை விட சிகப்பு நிற ஒளியை உமிழ குறைந்த மின்னழுத்தம் போதுமானது. இதனால் கணினி அல்லது மடிக்கணினியின் மின் நுகர்வும் குறைகிறது. குறிப்பாக பேட்டரி மூலம் இயங்கும் வயர்லெஸ் மவுஸ்களில் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்கவும் சிவப்பு விளக்கு பெருமளவில் உதவுகிறது. மவுஸில் உள்ள ஆப்டிகல் சென்சார்கள் சிகப்பு நிற வெளிச்சத்தை எளிதாகவும் துல்லியமாகவும் கண்டறியும் திறன் கொண்டவையாகவும் அதிக வெளிச்சம் தருவதாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள் -  Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!

55
நவீன மவுஸ்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Image Credit : Getty

நவீன மவுஸ்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இப்போது வரும் நவீன மவுஸ்களில் சிகப்பு விளக்கிற்குப் பதிலாக லேசர் அல்லது ப்ளூ ட்ராக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இது கண்ணாடியின் மேல் கூட துல்லியமாக வேலை செய்யும். ஆனால் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மவுஸ்களில் இன்றும் சிகப்பு விளக்கே முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொழில்நுட்பச் செய்திகள்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cheapest Plan: இந்தியாவின் மலிவான போஸ்ட்பெய்ட் பிளான்.. வெறும் ரூ.199-க்கு இவ்வளவு வசதிகள் இருக்கா
Recommended image2
Free WiFi-ல் UPI, பேங்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே உங்க அக்கவுண்ட்டை செக் பண்ணுங்க!
Recommended image3
Mobile Phone : இரவு தூங்கும்போது செல்போனை தலையணைக்கு அருகில் வைக்கிறீர்களா?
Related Stories
Recommended image1
Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?
Recommended image2
Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved