Asianet News TamilAsianet News Tamil

ஸ்ட்ராங் ரூம் அருகே சென்ற கார்.. யார் நீ? முகவர்கள் - அதிகாரிகள் இடையே வாக்குவாதம்..

ஸ்ட்ராங் ரூம் அருகே சென்ற காரில் சென்றவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஈடுபட்டது.

கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் முடிவு அடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் Strong Roomல் வைக்கப்பட்டு அந்த அறை அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்புகள் சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகள் ஆனது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அங்கு வேட்பாளர்களின் முகவர்களும் உள்ளனர். Strong Room அருகே யாரும் செல்லக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில் இன்று காலை தனியார் வாகனம் ஒன்று Strong Room அருகே சென்று நின்றுள்ளது.

இதனைப் பார்த்த முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த கார் பணிபுரியும் பேராசிரியரின் கார் என  தெரிய வந்தது.இந்தப் பகுதியில் யாரும் வரக்கூடாது வேட்பாளர்கள் கூட அவர்களின் காரில் வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இதனை அனுமதித்தார்கள் என்று கூறி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யார் அங்கே சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முகவர்களை சமாதானப்படி காரை அனுப்பி வைத்தனர்.

Video Top Stories