டெண்டர் முறைகேடு நெருக்கடி கொடுக்கும் திமுக...! தப்பிப்பாரா இபிஎஸ்..? உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி கட்ட விசாரணை நடைபெறவுள்ளது

The hearing in the tender fraud case against EPS will be held in the Supreme Court today

டெண்டர் முறைகேட்டில் மோசடி

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும் இதுகுறித்து 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். இதே போல அறப்போர் இயக்கமும் புகார் கூறியிருந்தது.  ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டு டெண்டர் வழங்கப்பட்டதாகவும்,  இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சராக இருந்த  எடப்பாடி கே.பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாதி வெறி குறித்து நீங்கள் பேசுவது ரொம்ப வியப்பா இருக்கு.. திருமாவை லெப்ட் ரைட் வாங்கும் பாஜக..!

The hearing in the tender fraud case against EPS will be held in the Supreme Court today

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய இபிஎஸ்..?

இதே போல பல்வேறு நிறுவனங்களுக்கு  எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி தவறாக வழங்கியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரை வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  கடந்த 2018ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரனை நடத்திய உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது .

“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு

The hearing in the tender fraud case against EPS will be held in the Supreme Court today

இறுதி விசாரணை தொடக்கம்

இந்நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து கொள்ளுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது. அதன்படி வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  அப்போது வழக்கில் எதிர்மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பில், இந்த வழக்கை இரண்டு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி இந்த வழக்கை அத்தனை நாட்கள் ஒத்திவைக்க முடியாது என கூறி வழக்கு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனையடுத்து இன்று வழக்கு விசாரணை தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் டெண்டர் முறைகேட்டு வழக்கில் இறுதி விசாரணை தொடங்கும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தப்பிப்பாரா? அல்லது சிக்கிக்கொள்வாரா என்பது விரைவில் தெரியவரும்.

ரப்பர்,மேகி விலை கூடிடுச்சு.! பென்சிலை திருடுகிறார்கள்... வேதனையோடு மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios