“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனைநடத்தினார்.

Aiadmk o panneerselvam supporter kovai selvaraj against speech jayakumar

இதற்கான கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு என இரண்டு தரப்பினரும் பங்கேற்றனர். 

Aiadmk o panneerselvam supporter kovai selvaraj against speech jayakumar

இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த  ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அதிமுகக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்துகொண்டார்.  சில நிமிடங்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வந்தனர். அப்போது அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கோவை செல்வராஜ் அமர்ந்திருப்பதை கவனித்த ஜெயக்குமார், அதிமுக பெயர் பலகை தங்கள் பக்கம் நகர்த்தி கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

பிறகு கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ். அவர் பேசிய பொது, ‘கூட்டத்தின் போது ஜெயக்குமார்  பலகையை நகர்த்தி வைத்ததார்.  தரம் இல்லாத செயல்களை செய்பவர்களை தரமான மனிதர் கண்டுகொள்ள மாட்டார்கள். இது ஒரு கேவலமான செயல் ஆகும். 

Aiadmk o panneerselvam supporter kovai selvaraj against speech jayakumar

அமைச்சராகவும், எம்எல்ஏவாகவும் இருந்தவர் இதுபோன்ற செயல்களை செய்வது கேவலமாக இல்லையா ? ஜெயக்குமார் முதலில் அதிமுகவா, இல்லையே. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான். அவர்தான் கட்சியை வழிநடத்துகிறார். சிங்கம் சிங்கிளாக தான் வரும். அண்ணன் அனுப்புகிற ஒரு ஆள் போதும் இதுபோன்றவர்களை  அடக்கி விடலாம்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு..நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios