MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!

ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்.. விஜய்க்கு தலைவலி!

ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என கூறிய வேளையில், ரஜினிக்கு திமுகவை எதிர்க்க மனவலிமை இல்லை. விஜய்க்கு அந்த மன வலிமை உள்ளது என ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

2 Min read
Author : Rayar r
Published : Mar 16 2026, 08:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா
Image Credit : Asianet News

ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக நடிகர் விஜய்யின் தவெக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பம்பரமாக சுழன்று வரும் நிலையில், அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து பேசிய கருத்து பெரும் சர்ச்சையானது. அதாவது திமுக குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குப் பல்வேறு மிரட்டல்களை கொடுத்து, அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்து முடக்கினர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

25
ஆதவ் அர்ஜுனாவுக்கு வலுக்கும் கண்டனம்
Image Credit : X

ஆதவ் அர்ஜுனாவுக்கு வலுக்கும் கண்டனம்

ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என கூறிய வேளையில், ரஜினிக்கு திமுகவை எதிர்க்க மனவலிமை இல்லை. விஜய்க்கு அந்த மன வலிமை உள்ளது என ஆதவ் அர்ஜுனா கூறியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ரஜினி குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொங்கியெழுந்தன.

Related Articles

Related image1
ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Related image2
விஜய்க்கு பின்னால் சகுனி ஆட்டம்..? ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல்..! அதிர வைக்கும் மச்சான் ஜோஸ் மார்ட்டின்..!
35
எல்.முருகன் கண்டனம்
Image Credit : F/L.Murugan

எல்.முருகன் கண்டனம்

இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் கூறுகையில், '' ஜாதி, மதம், மொழியைக் கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அனைத்த தரப்பு மக்கள் மீது தீராத அன்பு கொண்ட அவர், தவறை சுட்டிக்காட்ட என்றுமே அவர் தயங்கியதில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயமின்றி எதிர்த்து நிற்பதையும் வழக்கமாக கொண்டவர்.

அரசியலுக்கு வந்து அவர் மக்கள் தொண்டாடற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த அவர்கள், அரசியல் பாதையில் பயணம் செய்ய முடிவு செய்து பிறகு உடல்நலப் பிரச்சனையால் முடிவை கைவிட்டார். அவரை பற்றியும் அவரது அரசியல் பயண முடிவு குறித்து தவெக மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா வாய்ப்புக்கு வந்தபடி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது.

மன்னிப்பு கேட்க வேண்டும்

சொந்த அரசியலுக்காக தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மாபெரும் நடிகர் குறித்து ஆதவ் அர்ஜூனா பேசியுள்ளததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அவருக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

45
நயினார் நாகேந்திரன்
Image Credit : X/@NainarBJP

நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ''தமிழக மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ள ஒரு மாபெரும் ஆளுமையைப் பற்றி தவெகவின் ஆதவ் அர்ஜூனா பொதுவெளியில் தேவையற்றக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது. அவர் ரஜினி ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

55
விஜய்க்கு தலைவலி
Image Credit : Asianet News

விஜய்க்கு தலைவலி

மேலும் பாஜக கூட்டணியில் உள்ள தமாக தலைவர் ஜி.கே.வாசன், 'ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களால் நேசிக்கப்படும் கலைத்துறையின் மூத்த நடிகர். உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். அவர் குறித்த ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ஏற்புடையதல்ல. மக்கள் நிராகரிப்பார்கள்'' என்று கூறியுள்ளார். 

ஏற்கெனவே தலைவர் விஜய், கரூர் சம்பவம், தனிப்பட்ட குடும்ப விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறார். இதுபோததென்று ஆதவ் அர்ஜுனாவும் தேவையில்லாமல் ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுத்து இருப்பது அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரஜினிகாந்த்
டிவி.கே. விஜய்
பிஜேபி
அரசியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விஜய் NDA கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் - செல்வப்பெருந்தகை பேட்டி
Recommended image2
Now Playing
மொத்தமும் மாறப்போகுது.! தமிழக அரசியலின் பிக்பாஷ் கிளைமாக்ஸ்! முதல்வர் பதவி: தியாகமா? வியூகமா?
Recommended image3
NDA கூட்டணியில் விஜய் வேண்டாம்.. முட்டுக்கட்டை போடும் இபிஎஸ்?.. பின்னணி என்ன?
Related Stories
Recommended image1
ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Recommended image2
விஜய்க்கு பின்னால் சகுனி ஆட்டம்..? ஆதவ் அர்ஜுனா திமுகவின் ஸ்லீப்பர் செல்..! அதிர வைக்கும் மச்சான் ஜோஸ் மார்ட்டின்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved