MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?

ரஜினியை மிரட்டிய திமுக.. புது குண்டை தூக்கிப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவும் சிஸ்டத்தை மாற்றவும் ரஜினிகாந்த் விரும்பினார். ரஜினிகாந்திற்கு அந்த நேரத்தில் திமுக மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை இல்லாமல் போனது.

2 Min read
Author : Rayar r
Published : Mar 12 2026, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசியல் களம்
Image Credit : Asianet News

தமிழக அரசியல் களம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டது. இதனால் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கட்சி நடிகர் விஜய்யின் தவெக. திமுகவையும், பாஜகவையும் விளாசி வரும் விஜய், திமுகவுக்கு நேரடி போட்டியே தவெக தான் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்து வருகிறார்.

24
ரஜினிகாந்தை மிரட்டிய திமுக‌
Image Credit : Facebook

ரஜினிகாந்தை மிரட்டிய திமுக‌

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வர விடாமல் திமுக மிரட்டியது என்று தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குப் பல்வேறு மிரட்டல்களை கொடுத்து, அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்து முடக்கினர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

Related Articles

Related image1
ஆதவ் அர்ஜூனாவை விஜய் கட்சிக்கு அனுப்பியதே திமுகதான்..! பகீர் கிளப்பும் மைத்துனர் சார்லஸ் மார்ட்டின்..!
Related image2
அரசியலில் இருந்து பின் வாங்கியது ஏன்?! மொத்த ரகசியத்தையும் போட்டு உடைக்கும் ரஜினி.!
34
மிரட்டலை தாங்க முடியாத ரஜினி
Image Credit : instagram

மிரட்டலை தாங்க முடியாத ரஜினி

எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரவும் சிஸ்டத்தை மாற்றவும் ரஜினிகாந்த் விரும்பினார். ரஜினிகாந்திற்கு அந்த நேரத்தில் திமுக மிரட்டல்களைத் தாங்கும் மனவலிமை இல்லாமல் போனது. இறுதியில் அவர் ரஜினிகாந்த் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

விஜய்க்கு மனவலிமை உள்ளது

ஆனால் அனைத்து மிரட்டல்களையும் தாங்கும் மன வலிமை விஜய்க்கு உள்ளதாகவும், திமுக அரசு எவ்வளவு இன்னல்களைக் கொடுத்தாலும், கரூரில் நடந்த சம்பவங்கள் போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தாலும் விஜய் பின்வாங்க மாட்டார் என்றும் ஆதவ் அர்ஜுனா உறுதிபடக் கூறினார். மேலும் திமுகவை விமர்சித்த வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், ஓபிஎஸ் ஆகியோர் இன்று திமுகவின் பணபலத்துக்கு முன்பு முடங்கி விட்டனர் என்றும் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

44
ரஜினிகாந்துக்கு நடந்தது என்ன?
Image Credit : instagram

ரஜினிகாந்துக்கு நடந்தது என்ன?

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2020ம் ஆண்டு அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆன்மிக அரசியலை முன்னெடுப்பேன் என்றும் கூறினார். பல ஆண்டுகள் எதிர்பார்ப்புக்கு பிறகு அவர் அரசியலுக்கு வந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அறிவித்த சில நாட்களிலேயே 2020 ஆம் ஆண்டு இறுதியில் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரஜினிகாந்த்
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் மாநகராட்சியில் ஊழல் ! அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் !
Recommended image2
Now Playing
தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை....கூட்டணியும் இல்லை ! எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Recommended image3
Now Playing
சிவகங்கை | சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரம்....சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் !
Related Stories
Recommended image1
ஆதவ் அர்ஜூனாவை விஜய் கட்சிக்கு அனுப்பியதே திமுகதான்..! பகீர் கிளப்பும் மைத்துனர் சார்லஸ் மார்ட்டின்..!
Recommended image2
அரசியலில் இருந்து பின் வாங்கியது ஏன்?! மொத்த ரகசியத்தையும் போட்டு உடைக்கும் ரஜினி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved