ரப்பர்,மேகி விலை கூடிடுச்சு.! பென்சிலை திருடுகிறார்கள்... வேதனையோடு மோடிக்கு கடிதம் எழுதிய 6 வயது சிறுமி

ரப்பர், பென்சில், மேகி விலைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் விலையானது உயர்ந்துள்ளது. இந்தநிலையில் 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தன்னிடம் 5 ரூபாய் மட்டுமே உள்ளது ஆனால் மேகி விலை 7 ரூபாயாக அதிகரித்துள்ளதாக வேதனையோடு தெரிவித்துள்ளார்.
 

A 6 year old girl has written a letter to Prime Minister Modi saying that the prices of pencils and rubbers have gone up

ரப்பர் ,பென்சில் விலை உயர்வு

மத்திய அரசு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி வரியை உயர்த்தி  கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்தது. பாக்கெட்டில் அடைத்து விற்க்கப்படும் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தயிர், வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும்  பென்சில் ஷார்ப்பனர், ரப்பர்,  மீதான ஜிஎஸ்டி வரி 12% லிருந்து 18% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இது போன்ற பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு இல்லாத நிலையில், நடப்பாண்டு ஜிஎஸ்டி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 20 முதல், 25 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. மேலும் 5 ரூபாய்க்கு விற்க்கப்பட்ட பென்சில், ரப்பர், ஷார்ப்பனர் ஆகியவற்றின் விலை தற்போது 2 முதல் 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதே போல குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

தயிர் விலையில் 50 காசு மட்டும் தான் மத்திய அரசு உயர்த்தியது.!திமுக உயர்த்திய விலை எவ்வளவு தெரியுமா- அண்ணாமலை

கேரள இளைஞர் குரங்கு அம்மையால் தான் உயிரிழந்தார்… உறுதிப்படுத்தியது மருத்துவ அறிக்கை!!

A 6 year old girl has written a letter to Prime Minister Modi saying that the prices of pencils and rubbers have gone up

பிரதமருக்கு சிறுமி கடிதம்

இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமாவ் நகரைச் சேர்ந்த கிரித்தி துபே  என்ற சிறுமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், என் பெயர் கிரித்தி துபே. நான் 1ஆம் வகுப்பு படிக்கிறேன்.மோடிஜி நீங்கள் மிகப்பெரிய விலைவாசி உயர்வுக்குக் காரணமாயிருக்கிங்க. என் பென்சில் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் விலை உயர்வுக்கு மோடிஜி நீங்கள்தான் காரணம். நான் சாப்பிடும் மேகியின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போது என் அம்மா பென்சில் கேட்டால் என்னை அடிக்கிறார் நான் என்ன செய்வது மற்ற குழந்தைகள் என் பென்சிலை திருடுகிறார்கள் மேலும் மேகி வாங்க என்னிடம் 5 ரூபாய் தான் உள்ளது ஆனால் தற்போது 7 ரூபாயாக விலையை உயர்ந்துவிட்டது என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். பள்ளியில் பென்சிலை தொலைத்து விட்டு, வேறு பென்சில் கேட்டதற்காக கீர்த்தியை கண்டித்து அவரது தாய் அடித்துள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட கோபத்தில் பிரதமருக்கு சிறுமி கடிதம் எழுதியுள்ளதாக கிரித்தி துபே தந்தை தெரிவித்துள்ளார். சிறுமியின் கடிதம் தற்போது நாடு முழுவதும் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்

maan ki baat: pm modi: கவனம் ஈர்த்த கர்நாடக தேனீ வளர்ப்பு விவசாயி: பிரதமர் மோடி பாராட்டு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios