தயிர் விலையில் 50 காசு மட்டும் தான் மத்திய அரசு உயர்த்தியது.!திமுக உயர்த்திய விலை எவ்வளவு தெரியுமா- அண்ணாமலை

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை உயர்த்தியன் காரணமாக தயிர் ,வெண்ணெய் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Annamalai said that the DMK government is responsible for the increase in the price of yogurt in Tamil Nadu

தயிர் விலையை உயர்த்தியது ஏன்..?

மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதன் காரணமாக  தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. இதே போல 200 கிராம் தயிர் விலை 25 லிருந்து 28 ரூபாயாகவும்,  ஒரு லிட்டர் நெய்க்கு ரூ 50ம், ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.  இந்த விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்க்கு பேட்டிய அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு உயர்த்தியுள்ள ஜி.எஸ்.டி வரி தொடர்பாக விளக்கம் அளித்தார். அதில் மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் டிரேட் மார்க் பெற்றவர்களுக்கு 5% ஜி.எஸ்.டி வரியானது விதிக்கப்பட்டது.  

அதிமுகவிற்கு தலைமை ஏற்க ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு தகுதி இல்லை..! அப்போ...யார் அந்த புதிய தலைமை..?கே.சி.பழனிசாமி அதிரடி

அனைத்து கட்சி கூட்டம்..! அதிமுக பெயர் பலகையை ஓபிஎஸ் ஆதரவாளரிடம் இருந்து தன் பக்கம் நைசாக நகர்த்திய ஜெயக்குமார்

Annamalai said that the DMK government is responsible for the increase in the price of yogurt in Tamil Nadu

விலை உயர்வும் தமிழக அரசும் 

ஆனால் மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு இந்த டிரேட் மார்க் வேண்டாம் திருப்பி கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் இதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் 6 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என தெரிவித்தார். இந்தநிலையில் 10 ரூபாய் இருந்த தயிர் விலையை 12 ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.  இதற்க்கு மத்திய அரசு உயர்த்தியுள்ள ஜி.எஸ்.டி வரி தான் காரணம் என திமுக அமைச்சர்கள் தெரிவித்தனர். மத்திய அரசு 5% தான் ஜிஎஸ்டி விதித்துள்ளது. இதற்கு 50 காசு தான் உயர்த்த வேண்டும், ஏன் 1 ரூபாய் 50 காசு உயர்த்தியது  என கேள்வி எழுப்பினார். மக்களை திமுகவினர்  முட்டாள் ஆக்குகிறார்கள், தமிழக அரசு இதை வைத்து சம்பாதிக்க பார்க்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டினார். 50 பைசா உயர்வுக்கு மத்திய அரசும், 1ரூபாய் 50 காசு உயர்த்தியதற்கு மாநில அரசு தான் காரணம் எனவும் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

உங்களுடைய அலட்சியத்தாலும் மெத்தன போக்கால் தேர்கள் விபத்து தொடர்கிறது. ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios