
திருச்சியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு !
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி நகரின் முக்கிய வணிகப் பகுதிகளான என்.எஸ்.பி ரோடு (NSB Road), சிங்காரத்தோப்பு மற்றும் தெப்பக்குளம் ஆகிய இடங்களில் புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனால் அப்பகுதிகளில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கவும் காவல்துறை சார்பில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் காவல்துறையினர் தீவிரமாக நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.