பூண்டியில் நடவு பணிக்கு சென்ற பெண்களை பணம் தருவதாக கூறி ஏமாற்றி பாஜக கூட்டத்திற்கு அழைத்து வந்துவிட்டதாக பாஜக நிர்வாகிகள் மீது பெண்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
திருவள்ளூரில் 2 குழந்தைகளின் தாய் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி அருகே ஏரி கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரைக் கூறிய பெற்றோரால் மனம் உடைந்த 10ம் வகுப்பு மாணவன் வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் யோகி பாபு திருத்தணி முருகன் கோவிலில் நள்ளிரவில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
திருத்தணியில் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருத்தணியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஊருக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவலாங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா மார்கழி மாத ஆருத்ர மகா அபிஷேகம் 42 வகை அபிஷேகங்கள் நடராஜப் பெருமானுக்கு ஆறு மணி நேரம் இரவு முழுவதும் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் ஏரிக்கரையோரப் பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்து வந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் உடன் தங்கியிருந்த நேபாள் இளைஞர் தப்பியோட்டம்.
திருத்தணி அருகே மனைவியை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கணவனை கைது செய்த காவல் துறையினர் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tiruvallur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvallur district on Asianet News Tamil. திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.