திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற ஆருத்ரா மகா அபிஷேகம்
திருவலாங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா மார்கழி மாத ஆருத்ர மகா அபிஷேகம் 42 வகை அபிஷேகங்கள் நடராஜப் பெருமானுக்கு ஆறு மணி நேரம் இரவு முழுவதும் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்த திருவலாங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில் ஆடல் வள்ளல் நடராஜப் பெருமான் ஐம்பெரும் சபைகளுள் முதல் சபையான இரத்தின சபையை உடையது. இந்த திருத்தளத்தில் மார்கழி மாதம் 10ம் தேதி டிசம்பர் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு திருக்கோயில் ஆருத்ரா மண்டபத்தில் ஆருத்ர மகா அபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.
நடராஜப் பெருமானுக்கு திருநீர், கதம்ப பொடி, மஞ்சள் பொடி, இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, தேன், பஞ்சாமிர்தம் என 42 வகையான அபிஷேகங்கள் ஆறு மணி நேரம் இரவு முழுவதும் இடைவிடாமல் அபிஷேகங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் ஆடல் வள்ளல் நடராஜ பெருமான் சிறப்பு ருத்ர தாண்டவ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இதனை தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் புறப்பட்டு சுவாமி திருவலாங்காடு கிராமம் முழுவதும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.