திருத்தணியில் கால்வாய்க்குள் பாய்ந்த மினி பேருந்து; 10 பயணிகள் படுகாயம்

திருத்தணி அருகே ஏரி கால்வாயில் மினி பேருந்து கவிழ்ந்து 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Velmurugan s  | Published: Jan 10, 2024, 12:49 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் இருந்து வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான பயணிகள் மினி பேருந்தை ஓட்டுநர் பர்குணன் வளர்புரம் நோக்கி ஓட்டி வந்தார். இந்த பேருந்தில் 22 பயணிகள் இருந்தனர். பேருந்து டி.புதூர் பகுதியை கடக்கும் பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கால்வாயில் மினி பேருந்து திடீரென்று கவிழ்ந்தது.

விபத்தைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த 22 பயணிகளும் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதில் 5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மினி பேருந்து ஏரி கால்வாயில் கவிழ்ந்தது காரணங்கள் குறித்து ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More...

Video Top Stories