திருத்தணி முருகன் கோவிலில் நள்ளிரவில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் யோகி பாபு திருத்தணி முருகன் கோவிலில் நள்ளிரவில் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

Velmurugan s  | Published: Jan 2, 2024, 9:48 AM IST

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த திருக்கோயிலில் 2024 ஆங்கில புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நள்ளிரவு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் நடிகர் யோகி பாபு கலந்து கொண்டார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் அறங்காவலர்கள்- சுரேஷ் பாபு, நாகன், ஆகியோர்கள் மலர்மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகர் யோகி பாபு உடன் முருக பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கோரி மகிழ்ந்தனர்.

Read More...

Video Top Stories