நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்க வருகை தந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி!
இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. 12 மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில் நள்ளிரவு 12 மனியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே வாக்கெடுப்பு நடைபெற்றது.வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், மசோதா நிறைவேறியதாக நள்ளிரவு 2 மணிக்கு அறிவிப்பு வெளியானது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இன்றய அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார்.