‘பூமர் அங்கிள்’ ஆக மாறி அதகளம் செய்யும் யோகிபாபு... வைரலாகும் டிரைலர்

சுவதீஸ் இயக்கத்தில் யோகிபாபு, ஓவியா, ரோபோ சங்கர், தங்கதுரை நடிப்பில் உருவாகி உள்ள பூமர் அங்கிள் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Share this Video

யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள படம் பூமர் அங்கிள். சுவதீஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யோகிபாபு உடன் பிக்பாஸ் பிரபல ஓவியா, நகைச்சுவை நடிகர்கள் தங்கதுரை, ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என தலைப்பு வைக்கப்பட்டிருந்த இப்படம் பின்னர் வடிவேலு தனக்கு அந்த தலைப்பு தேவைப்படுவதாக கேட்டுக்கொண்டதை அடுத்து பூமர் அங்கிள் என மாற்றிக்கொண்டனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹல்க், வொண்டர் வுமன், ஜோக்கர் என ஹாலிவுட் பட கேரக்டர்களையெல்லாம் பயன்படுத்தி உள்ளது வித்தியாசமாக உள்ளது.

Related Video