குஸ்தி வீரனாக கோதாவில் இறங்கிய விஷ்ணு விஷால் - கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி டிரைலர்

விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள கட்டா குஸ்தி படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ganesh A  | Published: Nov 20, 2022, 12:28 PM IST

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் கட்டா குஸ்தி. விஷ்ணு விஷாலும், ரவி தேஜாவும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக நடித்து அசத்திய ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

கட்டா குஸ்தி திரைப்படம் தெலுங்கில் மட்டி குஸ்தி என்கிற பெயரில் ரிலீசாக உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 2-ந் தேதி வெளியிடப்படும் என்றும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்த படக்குழு, தற்போது அப்படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளது.

இதில் கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யாவை கரம்பிடிக்க நாயகன் குஸ்தி வீரனாக களமிறங்குவதை அடிப்படையாக வைத்து தான் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர். செம்ம மாஸாகவும், ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்துள்ள கட்டா குஸ்தி பட டிரைலருக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Read More...

Video Top Stories