Kannappa Teaser: பாகுபலி படத்துக்கே சவால் விடும் போலயே..! விஷ்ணு மஞ்சு நடித்துள்ள 'கண்ணப்பா' டீஸர் வெளியானது!

இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.
 

Share this Video

விஷ்ணு மஞ்சு, அக்‌ஷய் குமார், மோகன் பாபு, மோகன்லால், பிரம்மானந்தம், பிரபாஸ் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வருகிறது ‘கண்ணப்பா’ திரைப்படம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

’கண்ணப்பா’ திரைப்படம் இந்திய காவியமாக மட்டும் இன்றி, காட்சி மொழியின் மூலம் மக்களுக்கு பிரமாண்டமான படைப்பாக இருக்கும் என்பதை தற்போது வெளியாகி உள்ள டீசரை பார்த்தாலே தெரிகிறது. இப்படம்’ சிவபெருமானின் பக்திமான் கண்ணப்பாவின் அசைக்க முடியாத பக்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. 

வாயு லிங்கத்தை கைப்பற்ற வருபவர்களை ஒற்றை ஆளாக நின்று கண்ணப்பா வீழ்த்துவதும், அவர் கயவர்கள் கையில் சிக்கும் போது அந்த சிவனே காப்பாற்ற வரும் காட்சிகள் தான் இதில் மிகவும் பிரமாண்டமாக காட்டப்பட்டுள்ளது. பாகுபலி படத்திற்கே சவால் விடுவது போல் ஒவ்வொரு காட்சியும் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோ இதோ.


Related Video