சாமிய கொன்னுட்டேன்! கல்விக்காக போராடும் ஆசிரியராக விமல் மிரட்டியுள்ள 'சார்' படத்தின் டீசர் வெளியானது!

கல்வியை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து பல படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதோ போன்ற கதைக்களத்தில் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

நடிகரும், கன்னி மாடம் படத்தின் மூலம் இயக்குனராக மாறிய போஸ் வெங்கட் தற்போது நடிகர் விமலை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'சார்'. இந்த படத்திற்கு முன்பு மபொசி என பெயரிடப்பட்ட நிலையில், ஒரு சில பிரச்சனை காரணமாக இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டது. 

சாமி பெயரை கூறி கல்விக்கு தடை போடும் கிராமத்தை பற்றியும், அங்குள்ள மாணவர்கள் படிப்புக்காக போராடும் ஒரு ஆசிரியர் பற்றிக்கும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய ஜனரஞ்சகமான கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 'வாகை சூடவா' படத்திற்கு பின்னர் இப்படி பட்ட தரமான, குறிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படத்தில் விமல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் இதோ.

Related Video