Thangalaan Trailer: சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும் தான் இங்க வாழ்க்கை.. மிரளவைக்கும் 'தங்கலான்' டிரைலர்..!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

Share this Video

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி சற்று முன் வெளியான இந்த ட்ரைலர், ஆங்கிலேயர் கால கட்டத்தில் தங்கம் எடுப்பதற்காக தொழிலாளர்கள் எப்படி அடிமை படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் விதத்தில் உள்ளது.

தங்கம் எடுப்பதை தடுக்கும் சூனியக்காரியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். படம் முழுக்க மனதை உலுக்கும் பழங்குடிகளின் ஏழ்மை வாழ்க்கை, போராட்டம், சண்டை என இருக்கிறது. மேலும் ட்ரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையில் தரத்தை ட்ரைலரிலேயே உணர முடிகிறது. தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் இதோ..

Related Video