சிட்டில என்னை தவிர எந்த ரவுடியும் இருக்க கூடாது! விக்ரம் பிரபு ஆக்ஷன் களத்தில் இறங்கிய 'ரெய்டு' ட்ரைலர்!

நடிகர் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக ஆக்ஷனில் மிரட்டும், 'ரெய்டு' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

நடிகர் விக்ரம் பிரபு மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள, 'ரெய்டு' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குனர் கார்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை, M ஸ்டுடியோஸ், G பிக்ச்சர்ஸ், ஓப்பன் ஸ்கிரீன் பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, சுமார் 6 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஹீரோயினாக கம் பேக் கொடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ திவ்யா. முக்கிய கதாபாத்திரத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தர் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரௌடிசத்தை ஒழிக்க, ரௌடிகள் வழியிலேயே சென்று.. அடக்குமுறை செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். இதுவரை நடித்திராத, வகையில் இப்படத்தில் அதிரடியான பல ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 11-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video