ஆக்‌ஷன் ஹீரோவாக மாஸ் காட்டும் விக்ரம் பிரபு - வைரலாகும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டிரைலர் இதோ

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது.

Share this Video

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் பாயும் ஒளி நீ எனக்கு. விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் விவேக் பிரசன்னா, தனஞ்சயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாகர் இசையமைத்து உள்ளார். ஸ்ரீதர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சி.எஸ்.பிரேம் குமார் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் அத்வைத் தான் இப்படத்தை தயாரித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் கூடிய இப்படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் நடிகர் விக்ரம் பிரபு ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி உள்ளார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற ஜூன் 23-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. எஸ்.பி.சினிமாஸ் நிறுவனம் தான் இப்படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றி உள்ளது.

Related Video