watch : விஜய், அஜித்தை போல் பஞ்ச் டயலாக் பேசி... ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டும் விக்ரம் பிரபு - ‘ரெய்டு’ டீசர் இதோ

கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ரெய்டு என்கிற ஆக்‌ஷன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Share this Video

டாணாக்காரன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரம் பிரபு, அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் ரெய்டு. இப்படத்தை கார்த்தி என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா டயலாக் எழுதி இருக்கிறார்.

கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மணிமாறன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கம் வாயிலாக ரெய்டு திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த டீசர் தற்போது யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

இதில் போலீஸாக நடித்துள்ள விக்ரம் பிரபு, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அதேபோல பஞ்ச் வசனங்களையும் பறக்கவிட்டுள்ளார். நடிகை ஸ்ரீதிவ்யா, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிப்பது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்னர் இருவரும் வெள்ளக்காரதுரை படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video