என்னோட லட்சுமியை கண்டு பிடிச்சு கொடுத்துடுங்க சார்.! விஜய் சேதுபதியின் 'மகாராஜா' பட ட்ரைலர் வெளியானது!

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக உருவாகியுள்ள 'மகாராஜா' படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
 

manimegalai a  | Published: May 30, 2024, 5:23 PM IST

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா. இந்த படத்தில் முடி வெட்டும் தொழிலாளியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். தன்னுடைய தொலைந்து போன லட்சுமி என்கிற பொருளுக்காக விஜய் சேதுபதி கடைசி வரை போராடுவதே இப்படத்தின் கதைக்களமாக உள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யாப் நடிக்க, நட்டி, பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகந்தாஸ், சிங்கம் புலி, அருள் தாஸ், முனீஷ்காந்த், வினோத் சாகர், பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அஜீனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். பரபரப்பான ஆக்சன் கதைகளத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More...

Video Top Stories