பேகம் இல்ல பிராமின்... விஜய் - சமந்தாவின் காதல் கலாட்டா நிறைந்த ‘குஷி’ டிரைலர் இதோ

ஷிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Aug 9, 2023, 3:58 PM IST | Last Updated Aug 9, 2023, 3:58 PM IST

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள திரைப்படம் குஷி. ஷிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், லட்சுமி, ராகுல் ராமகிருஷ்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

குஷி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இதில் விஜய் தேவரகொண்டாவை ஏமாற்றுவதற்காக முதலில் முஸ்லிம் போல நடிக்கும் சமந்தா பின்னர் காதலித்ததும் தான் ஒரு பிராமின் வீட்டு பெண் என சொல்ல, இருவரது குடும்பத்தினரும் அவர்களுக்கு பொறுத்தமில்லை ஜாதகத்தில் தோஷம் இருப்பதாக திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பெற்றோரின் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளும் இருவரும் அதன் பின் கல்யாண வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகளையெல்லாம் சந்தித்தார்கள் என்பதை விவரிக்கும் விதமாக இந்த டிரைலர் அமைந்துள்ளது. இதைப்பார்க்கும் போது திருமணம் எனும் நிக்கா படம் போல இருப்பதாகவும் சில கமெண்ட் செய்து வருகின்றனர். 

Video Top Stories