Hitler Teaser: ஆக்ஷன் கதையில்... விஜய் ஆண்டனி மிரட்டியுள்ள 'ஹிட்லர்' பட டீசர் வெளியானது!

இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர், திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

manimegalai a  | Published: Dec 26, 2023, 6:57 PM IST

விஜய் ஆண்டனி இதற்கு முன்பு நடித்த திரைப்படங்களை விட, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட ஆக்சன் திரில்லர் பாணியில் நடித்துள்ள திரைப்படம் 'ஹிட்லர்'. இந்த படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டீசரை வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

Read More...

Video Top Stories