Asianet News TamilAsianet News Tamil

"திருப்பி அடி"... வெற்றிமாறன், வெங்கட்பிரபு, பா.ரஞ்சித் குரலில் தெறிக்கும் 'ரத்தம்' பட டீசர் இதோ

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி உள்ள ரத்தம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

First Published Dec 6, 2022, 8:17 AM IST | Last Updated Dec 6, 2022, 8:17 AM IST

தமிழ் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் சி.எஸ்.அமுதன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ரத்தம். விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கண்ணன் நாராயண் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்த டீசருக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா.இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்து உள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Video Top Stories