பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஐடியா கேட்கும் விஜய் ஆண்டனி! கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெளியானது 'Romeo' ட்ரைலர்!

விஜய் ஆண்டனி - மிருணாளினி ரவி, இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ரோமியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

First Published Mar 25, 2024, 6:35 PM IST | Last Updated Mar 25, 2024, 6:35 PM IST

தமிழ் திரையுலகில், இசையமைப்பாளராக அறிமுகமாகி 'நான்' படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் விஜய் ஆண்டனி. சமீப காலமாக தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர், ஒரே மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் நடிப்பதை விட, வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில்... சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன், சலீம், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதை தொடர்ந்து நடிகை மிருணாளினி ரவிக்கு ஜோடியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம், 'ரோமியோ'. பெற்றோரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சில கண்டிஷனுடன் விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொள்ளும் மிருணாளினியை... திருமணத்திற்கு பின் விஜய் ஆண்டனி எப்படி காதலித்து கரெக்ட் செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில்  விஜய் ஆண்டனி முதன்முறையாக ரொமாண்டிக் ஹீரோவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories