வாடிவாசலுக்கு முன் வாகைசூட வரும் வெற்றிமாறனின் ‘பேட்டைக்காளி’ - அனல்பறக்கும் டிரைலர் இதோ

வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள பேட்டைக்காளி வெப்தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Oct 13, 2022, 3:55 PM IST | Last Updated Oct 13, 2022, 3:56 PM IST

சூர்யாவை வைத்து வாடிவாசல் என்கிற படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பே, தற்போது அவரது தயாரிப்பில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களையும், அதில் களமிறங்கும் வீரர்களையும் மையமாக வைத்து பேட்டைக்காளி என்கிற வெப் தொடர் தயாராகி உள்ளது.

ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்பவர்களுக்கும், அதனை அடக்குபவர்களுக்கும் இடையே உள்ள மோதல், வீரம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த பேட்டைக்காளி படத்தை இயக்கி உள்ளார் ல.ராஜ்குமார். இப்படத்தில் ஷீலா ராஜ்குமார், கிஷோர், வேலராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார்.

பேட்டைக்காளி வெப் தொடரின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், வாடிவாசல் படத்தின் முன்னோட்டமாக இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளதுபோல் தெரிவதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்... இந்து மத பிரச்சனையால்... பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலிக்கப்போகுது - கொளுத்திப்போட்ட பார்த்திபன்

Video Top Stories