தாழ்த்தப்பட்ட மக்களில் வலியை பேசும் 'வாழை'; வெளியானது ட்ரைலர்..!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'வாழை' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது.
 

Share this Video

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களில் தாழ்த்தப்பட்ட மக்களில் வலிகளை பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தற்போது வாழை தொழிலாளர்களின் வாழ்க்கை... மற்றும் அவர்களின் வலியை பேசியுள்ள படம் தான் 'வாழை'. இந்த படத்தை சிறு வயதில் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களை வைத்தே மாரி செல்வராஜ் உருவாக்கியுள்ளார்.

கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை திரையில் சொல்லப்படாத மக்களை பற்றி இப்படம் கூறவுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உதயநிதியின் கடைசி படமான 'மாமன்னன்' படத்தின் மெகாஹிட் வெற்றிக்கு பின்னர் வெளியாக உள்ள இந்த படத்தின் காட்சிகள் மற்றும் சில வசனங்கள், 'கர்ணன்' படத்தை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video