அமைச்சர் ஆன பின் ரிலீசாகும் உதயநிதியின் முதல் படம்... மிரட்டலான டிரைலருடன் வந்த ‘கண்ணை நம்பாதே’ ரிலீஸ் தேதி

மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

First Published Feb 27, 2023, 12:36 PM IST | Last Updated Feb 27, 2023, 12:36 PM IST

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக ரிலீசான கலகத் தலைவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் ரிலீசுக்கு பின் அவர் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதால், சினிமாவில் இனி நடிக்கப்போவதில்லை என்பதையும் அறிவித்தார் உதயநிதி. இதனால் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த கமல்ஹாசனின் தயாரிக்கும் படத்தில் இருந்தும் விலகினார்.

உதயநிதி ஸ்டாலின் கைவசம் மாமன்னன் மற்றும் கண்ணை நம்பாதே ஆகிய 2 திரைப்படங்கள் உள்ளன. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில் முதலாவதாக ரிலீசாக உள்ள படம் கண்ணை நம்பாதே. இப்படத்தை மு.மாறன் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே இரவுக்கு ஆயிரம் கண்கள் என்கிற திரில்லர் படத்தை இயக்கியவர் ஆவார்.

இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, பழ கருப்பையா, சுபிக்‌ஷா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் டிரெண்டாகி வரும் நிலையில், அதில் அப்படம் வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உதயநிதி அமைச்சர் ஆன பின் ரிலீசாகும் முதல் படம் இதுவாகும்.

Video Top Stories