சாதி கடந்த காதல்.. உண்மையாக நடந்த கொடூர சம்பவத்தை கண் முன் நிறுத்தும் 'நவயுக கண்ணகி'! ட்ரைலர்!

உண்மை கதையை மையமாக வைத்து, உருவாகியுள்ள நவயுக கண்ணகி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

| Updated : Dec 19 2023, 11:01 PM
Share this Video

இயக்குனர் கிரண் துரைராஜ் இயக்கத்தில் சாதியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'நாவயுக கண்ணகி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் கிரண் துரைராஜ் இயக்கி உள்ளார். சாதி விட்டு சாதி காதலிப்பதால் பிரிக்கப்படும் காதல் குறித்தும், அதனால் ஏற்படும் மரணம் குறித்தும், அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி திசை மாறி செல்கிறது என்பது பற்றியும் பரபரப்பான காட்சிகளுடன் இந்த ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இப்படம் நேரடியாக ஷார்ட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் பவித்ரா தென்பாண்டியன் ஹீரோயினாக நடித்த, விமல் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தென்பாண்டியன், ஜெயபிரகாஷ், சுகந்தி குமார், குடியாத்தம் குமார், மைதிலி குமார், உள்ளிட்ட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

Related Video