ஒரு வேல நான் யோசிக்கிறது சரியா இருந்துட்டா? திக் திக் காட்சிகள்..! த்ரிஷாவின் 'தி ரோட்' ட்ரைலர் வெளியானது!

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள, 'தி ரோட்' திரைப்படத்தின் பரபரப்பான ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

AAA சினிமா பிரைவெட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடிக்கும் 'தி ரோட்' திரைப்படம் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது. த்ரிஷா கதையின் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் த்ரிஷாவுடன் "சார்பட்டா பரம்பரை "புகழ் டான்சிங் ரோஸ் "சபீர்", சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, லட்சுமி பிரியா, செம்மலர் அன்னம், ராட்ச்சசன் வினோத், கருப்பு நம்பியார், நேகா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம், ஒவ்வொரு நிமிடமும் அடுத்த என்ன நடக்கும் என்கிற பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு சாம்.C.S இசையமைக்க K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video