மெல்லிசை மெட்டே ஆட்டம் போட வைக்குதே! தளபதியின் 'Goat' படத்தில் இருந்து வெளியான மூன்றாவது சிங்கிள் புரோமோ!

நாளை வெளியாக உள்ள தி கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
 

manimegalai a  | Published: Aug 2, 2024, 8:43 PM IST


தளபதி விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள... 'கோட்' படத்தின் 3-ஆவது சிங்கிள் பாடல் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை வெளியாக உள்ளது. சரியாக 6 மணிக்கு தமிழிலும், 7 மணிக்கு தெலுங்கிலும் இப்பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

விஜய் ஆடிப்பாடியுள்ள ரொமான்டிக் பாடலான இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துபாடியுள்ளார் . காதல் ரசம் சொட்ட உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மனதை மயக்கும் மெட்டுடன் இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை AGS நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Read More...

Video Top Stories