துணிவுக்கு போட்டியாக செம்ம மாஸா... கெத்தா ரிலீசானது தளபதி விஜய்யின் வாரிசு பட டிரைலர்

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷியாம், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Jan 4, 2023, 5:01 PM IST | Last Updated Jan 4, 2023, 5:01 PM IST

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வாரிசு. நடிகர் விஜய்யின் 66-வது படமான இதனை தெலுங்கு திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். தமிழில் இவர் இயக்கும் 2-வது படம் இதுவாகும் இதற்கு முன் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கி இருந்தார்.

வாரிசு, குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கமர்ஷியல் திரைப்படம் என்பதால் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். இது தமிழில் வாரிசு என்கிற பெயரிலும், தெலுங்கில் வாரிசுடு என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது.

பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள இப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளது. இதனால் இரண்டு படங்களும் போட்டி போட்டி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் துணிவு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதன் டிரைலருக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து இருந்தன.

இந்நிலையில், அதற்கு போட்டியாக தற்போது விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி உள்ள இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இது யூடியூப்பில் என்னென்ன சாதனைகளையெல்லாம் தகர்த்தெறிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Video Top Stories