பல கெட்டப்புகளில் சுந்தர்சியுடன் காமெடியில் ரணகளம் பண்ணும் வடிவேலு! 'கேங்கர்ஸ்' ட்ரைலர்!

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள காமெடி திரைப்படமான, 'கேங்கர்ஸ்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video


'தலைநகரம்' படத்தில் எப்படி சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி அதிகம் ரசிக்கப்பட்டதோ அதே போல், வடிவேலு முழுக்க முழுக்க காமெடியில் அட்ராசிட்டி செய்துள்ள, 'கேங்கர்ஸ்' திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் காமெடி அளப்பறையை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஏப்ரல் 24-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தில், சுந்தர்சிக்கு ஜோடியாக கேத்தரின் திரேசா நடித்துள்ளார். மேலும் மைம் கோபி, சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரியான சுந்தர்சி மாறுவேடத்தில், பிடி மாஸ்டராக வரும் நிலையில்... 100 கோடி பணத்தை திருட முயற்சிப்பவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே இந்த படத்தின் கதைக்களம்.

Related Video