பிகில் ராயப்பன் கெட் அப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி... வைரலாகும் மைக்கேல் படத்தின் மாஸ் டிரைலர்

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷான், விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் மைக்கேல் படத்தின் மாஸ் ஆன டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.

First Published Jan 23, 2023, 11:24 AM IST | Last Updated Jan 23, 2023, 11:24 AM IST

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் மைக்கேல். சந்தீப் கிஷான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாஸ் ஆன வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இது பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது.

சந்தீப் கிஷானுக்கு ஜோடியாக திவ்யங்கா கவுசிக் நடித்துள்ள இப்படத்தில் கவுதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், மைக்கேல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தமிழ் டிரைலரை ஜெயம் ரவி மற்றும் அனிருத் வெளியிட்டுள்ளனர். ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக செல்லும் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Video Top Stories