ரைட் இஸ் பேக்... ஆக்‌ஷனில் மிரட்டும் சுந்தர் சி-யின் ‘தலைநகரம் 2’ டிரைலர் இதோ

வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்துள்ள தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

சுந்தர் சி நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தலைநகரம். அப்படத்தை சுராஜ் இயக்கி இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தற்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தை அஜித்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா போன்ற படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி உள்ளார்.

தலைநகரம் 2 படத்தில் சுந்தர் சி நாயகனாக நடித்திருந்தாலும், முதல் பாகத்தில் நகைச்சுவை காட்சிகளில் கலக்கிய வடிவேலு இப்படத்தில் நடிக்கவில்லை. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். பாலக் லல்வானி நாயகியாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Thalainagaram 2 - Official Trailer | Sundar C, Palak Lalwani | Ghibran | Dhorai V.Z

Related Video