watch : திரில்லர் ஸ்டோரியில் தெறி பேபி ஆக மிரட்டும் சுனைனா - வைரலாகும் ரெஜினா டிரைலர் இதோ

டொமின் டி சில்வா இயக்கத்தில் நடிகை சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள ரெஜினா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ganesh A  | Published: Jun 6, 2023, 1:19 PM IST

மலையாளத்தில் கவனிக்கத்தக்க படங்களை கொடுத்துள்ள டொமின் டி சில்வா தமிழில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ரெஜினா. இப்படத்தில் நடிகை சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் நிவாஸ் ஆதித்தன், ரிது மந்திரா, விவேக் பிரசன்னா, அப்பானி சரத் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை யெல்லோ பியர் புரொடக்‌ஷன் சார்பில் சதீஷ் நாயர் தயாரித்துள்ளார்.

பவி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்து உள்ளார். ரெஜினா திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இப்படத்தின் டிரைலரை தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தான் ரெஜினா படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. டிரைலரை பார்த்த ரசிகர்கள் சுனைனாவுக்கு இது கம்பேக் படமாக அமையும் என வாழ்த்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் டிரைலர் அமைந்துள்ளது.

 

Read More...

Video Top Stories