watch : இந்தியாவில் 10 மொழிகளில் ரிலீசாகும் ‘ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' - மாஸான டிரைலர் இதோ

ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share this Video

இந்தியர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ஹாலிவுட் படங்களில் ஸ்பைடர் மேனும் ஒன்று. தற்போது அந்த படத்தின் புதிய வெர்ஷனான ‘ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் வருகிற ஜூன் மாதம் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட 10 மொழிகளில் இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

‘ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' படத்தை ஜோகிம் டாஸ் சாண்டோஸ், கெம்ப் பவர்ஸ் மற்றும் ஜஸ்டின் கே. தாம்சன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். கடைசியாக வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்துக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்ததன் காரணமாக அதன் அடுத்த வெர்ஷனான ‘ஸ்பைடர்மேன் : அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ்' படத்தை 10 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறார்களாம். அதன் டிரைலரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Video