ஒரே ஒரு லவ்... அதுக்கு World War-ஏ வந்திடும் போல - காமெடி கலாட்டா நிறைந்த ‘பிரின்ஸ்’ பட டிரைலர் இதோ

Prince : காமெடி காட்சிகள் நிறைந்து கலர்புல்லான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

First Published Oct 9, 2022, 8:53 PM IST | Last Updated Oct 9, 2022, 8:53 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் பிரின்ஸ். தெலுங்கில் கடந்த ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன  ஜாதி ரதனலு படத்தை இயக்கிய அனுதீப் தான் பிரின்ஸ் படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்தின் மூலம், அவர் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடித்துள்ளார்.

பிரின்ஸ் படத்திற்கு பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதேபோல் தமன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 21-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த இளைஞரான சிவகார்த்திகேயன், வெளிநாட்டு பெண்ணை காதலிப்பதன் பின்னணியும், அதற்காக அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லியுள்ளனர். காமெடி காட்சிகள் நிறைந்து கலர்புல்லான பிரின்ஸ் படத்தின் டிரைலர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Video Top Stories