மேஜர் முகுந்த் வரதராஜனாக மாறி தேச பக்தியை கண் முன் நிறுத்திய சிவகார்த்திகேயன்; 'அமரன்' ட்ரைலர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள அமரன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Oct 23, 2024, 6:44 PM IST | Last Updated Oct 23, 2024, 6:44 PM IST

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், முதல் முறையாக  நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் அக்டோபர் 31-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு சற்று முன் வெளியிட... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் இதோ..

Video Top Stories