Asianet News TamilAsianet News Tamil

Watch : இங்க எவன் ஆளனும்னு நான்தான்டா முடிவு பண்ணுவேன்... தெறிக்கவிடும் சிம்புவின் ‘பத்து தல’ டிரைலர்

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Mar 19, 2023, 8:05 AM IST | Last Updated Mar 19, 2023, 8:05 AM IST

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு பின், சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் பத்து தல. சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா தான் இப்படத்தை இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைத்து உள்ளார்.

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அதன் இறுதியில் அப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. அனல் பறக்கும் அரசியல் வசனங்களும், அதகளமான ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று உள்ளது.

பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் சிம்பு உடன் கவுதம் கார்த்திக், கவுதம் மேனன், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Video Top Stories