ரசிகர்களுக்கு ஆக்ஷன் ட்ரீட் கன்ஃபாம்! வெள்ளி விழா நாயகன் மோகன் நடித்துள்ள 'ஹரா' படத்தின் ட்ரைலர் வெளியானது!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மைக் மோகன் கதையின் நாயகனாக ஆக்ஷனில் கலக்கியுள்ள ஹரா படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
 

First Published May 25, 2024, 9:38 PM IST | Last Updated May 25, 2024, 9:38 PM IST


 'தா தா 87' படத்தை இயக்கிய, இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில்... நீண்ட இடைவெளிக்கு பின்னர் தன்னுடைய தரமான கம் பேக் படத்தை கொடுத்துள்ளார் மைக் மோகன் என்பது, 'ஹரா' படத்தின் ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

ஏற்கனவே இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மோகனுக்கு ஜோடியாக அயலி, ஹார்ட் பீட் போன்ற வெப் சீரீஸ்களில் கலக்கி வரும் அனுமோல் நடித்துள்ளார். 

முக்கிய கதாபாத்திரத்தில்  யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மூத்த நடிகர் சாருஹாசன் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள், இப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஜூன் 7-ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories