அடுத்த ராட்சசன் ரேஞ்சுக்கு இருக்கே! சிபிராஜின் டென் ஹவர்ஸ் படத்தின் டிரைலர் இதோ
இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ள திரில்லர் திரைப்படமான டென் ஹவர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
புதுமுக இயக்குனர் இளையராஜா கலியப்பெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ள படம் டென் ஹவர்ஸ். பேருந்தில் நடக்கும் கொலைக்கு பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் போலீஸ் அதிகாரியாக சிபிராஜ் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த ராட்சசன் ரேஞ்சுக்கு திரில்லிங்காக இருப்பதாக கூறி வருகின்றனர்.