watch : கருவேலங்காட்டு அரசியலை பேசும் ‘இராவணக் கோட்டம்’ படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ

மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடித்துள்ள இராவணக் கோட்டம் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.

First Published Apr 6, 2023, 7:24 AM IST | Last Updated Apr 6, 2023, 7:24 AM IST

மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் இராவணக் கோட்டம். சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும் பிரபு, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இராவணக் கோட்டம் திரைப்படம் கருவேலங்காட்டு அரசியலை பேசும் படமாக உருவாகி உள்ளது. கடந்த 1957-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். இப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு வெளியிட்ட இந்த டிரைலர் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.

Video Top Stories