ஏமாத்துறது தப்பில்ல... ஏமாறுறது தான் தப்பு! வைரலாகும் சதீஷின் வித்தைக்காரன் டீசர் இதோ

வெங்கி இயக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் சதீஷ். இவர் கடந்தாண்டு வெளியான நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் வெற்றியடைத்தது. இதையடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவெடுத்த சதீஷ் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் தான் வித்தைக்காரன்.

இப்படத்தை வெங்கி என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடித்துள்ளார். விபிஆர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை கே.விஜய் பாண்டி என்பவர் தயாரித்துள்ளார். இதில் சதீஷ் உடன் ஆனந்தராஜ், மதுசுதன், பால் நவகீதன், ஜான் விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்நிலையில், வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த டீசரை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர். இதில் மெஜிசியனாக நடித்திருக்கிறார் நடிகர் சதீஷ், ஏமாத்துறது தப்பில்ல... ஏமாறுறது தான் தப்பு என பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசி அவர் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Related Video