15 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸ் ஆகும் சுப்ரமணியபுரம்... ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த புது வெர்ஷன் டிரைலர் இதோ

சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன சுப்ரமணியபுரம் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் புது டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Aug 2, 2023, 1:04 PM IST | Last Updated Aug 2, 2023, 1:04 PM IST

பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சசிகுமார், சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2008-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தின் சசிகுமார் உடன் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மதுரை பின்னணியில் தரமான ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி இருந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

சுப்ரமணியபுரம் படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகள் ஆனாலும், அதற்கான மவுசு இன்றளவும் குறைந்தபாடில்லை. இதனைக் கருத்தில் கொண்டு அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். அதன்படி சுப்ரமணியபுரம் படத்தை வருகிற ஆக்ஸ்ட் 4-ந் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இப்படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி, அதன் புது வெர்ஷன் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜேம்ஸ் வஸந்தன் இசையமைத்து தீம் மியூசிக் உடன் கூடிய அந்த புது வெர்ஷன் டிரைலர் செம்ம வைரலாகி வருகிறது. வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் சாதனை நிகழ்த்தியதை போல் சுப்ரமணியபுரம் படமும் ரீ-ரிலீஸ் ஆகி வசூலை வாரிக்குவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Video Top Stories