விக்ரமின் துருவ நட்சத்திரத்தை காலி பண்ண கமல் ரஜினியோடு களமிறங்கும் சந்தானத்தின் ‘பில்டப்’ பட டீசர் இதோ

எஸ்.கல்யாண் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 80ஸ் பில்டப் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ganesh A  | Published: Nov 5, 2023, 3:06 PM IST

பிரபுதேவா நடித்த குலேபகாவலி, ஜோதிகாவின் ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய எஸ்.கல்யாண் அடுத்ததாக இயக்கி உள்ள காமெடி திரைப்படம் தான் 80ஸ் பில்டப். இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சன் டிவி சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி நடித்திருக்கிறார். ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார்.

80ஸ் நடக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு இடையேயான ரசிகர்கள் மோதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இதில் சந்தானத்துடன் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், ஆனந்த ராஜ், பிக்பாஸ் பிரபலம் கூல் சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பில்டப் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 24-ந் தேதி விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், 80ஸ் பில்டப் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More...

Video Top Stories